பிரதமர் மஹிந்தவின் மட்டு - அம்பாறை இணைப்பாளராக கருணா அம்மான் நியமனம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, October 13, 2020

பிரதமர் மஹிந்தவின் மட்டு - அம்பாறை இணைப்பாளராக கருணா அம்மான் நியமனம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மட்டு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (13) அலரி மாளிகையில் வைத்து உத்தியோகபூர்வமாக தனது நியமனக் கடிதத்தை அவர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், அதில் தோல்வியடைந்த நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வதற்கான ஓர் சந்தர்ப்பத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கேட்டிருந்தார்.

இதற்கமைய, கருணா அம்மானுக்கு பிரதமரினால் இப்பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad