அக்கரைப்பற்று கண்ணகிபுரத்தில் துப்பாக்கி மீட்பு - ஒருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 20, 2020

அக்கரைப்பற்று கண்ணகிபுரத்தில் துப்பாக்கி மீட்பு - ஒருவர் கைது

அக்கரைப்பற்று, கண்ணகிபுரம் வயல் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சொட்கண் துப்பாக்கி ஒன்றை இன்று (20) காலை அக்கரைப்பற்று பொலிசார் மீட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று இரகசிய பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உரப்பை ஒன்றினுள் சுற்றி குழாய் ஒன்றிற்குள் மறைத்து வைத்திருந்த சொட் கண் துப்பாக்கியையே பொலிசார் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கண்ணகிபுரம் பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போவுக்கு பின் வீதியில் உள்ள வெற்று காணி ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து ரி 81 ரக துப்பாக்கி ஒன்றையும் 30 ரவைகளையும் தேசிய புலனாய்வு பிரிவினர் நேற்று (19) மீட்டு அக்கரைப்பற்று பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவங்கள் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசார் மேலதிக விசாரணைகளை மெற்கொண்டு வருகின்றனர்.

(அக்கரைப்பற்று நிருபர் - எஸ்.ரி. ஜமால்தீன்)

No comments:

Post a Comment