சேவையிலுள்ள எந்தவொரு அலுவலக பாதுகாப்பு அதிகாரிக்கும் கொரோனா இல்லை - பிரதமரின் ஊடகப் பிரிவு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 25, 2020

சேவையிலுள்ள எந்தவொரு அலுவலக பாதுகாப்பு அதிகாரிக்கும் கொரோனா இல்லை - பிரதமரின் ஊடகப் பிரிவு

பிரதமர்‌ அலுவலகத்தில்‌ சேவையில்‌ ஈடுபட்டுள்ள பொலிஸ்‌ அதிகாரியொருவருக்கு கொவிட்‌-19 தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக பரவியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகத்தினால், பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட விடுத்துள்ள அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரதமர்‌ அலுவலகம்‌, அலரி மாளிகை, விஜேராமவிலுள்ள பிரதமரின்‌ உத்தியோகபூர்வ இல்லத்தில்‌ சேவையாற்றும்‌ பிரதமர்‌ பாதுகாப்பு பிரிவின்‌ எந்தவொரு அதிகாரியும்‌ கொவிட்‌-19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என உறுதிப்படுத்துகிறேன்.

பிரதமர்‌ அலுவலகத்தில்‌ பணியாற்றும்‌ பொலிஸ்‌ அதிகாரியொருவருக்கு கொவிட்‌-19 தொற்று ஏற்பட்டிருப்பதாக பரவிவரும்‌ செய்தியில்‌ எவ்வித உண்மைத்‌ தன்மையும்‌ இல்லாததுடன்‌, பிரதமர்‌ பாதுகாப்பு பிரிவுடன்‌ இணைந்த வெளிப்புற பிரிவொன்றின்‌ அதிகாரியொருவரே கொவிட்‌ தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக அடையாளம்‌ காணப்பட்டுள்ளார்‌.

கெளரவ பிரதமர்‌ பங்கேற்கும்‌, வெளி நிகழ்வுகளின்‌ பூரண பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான தயார்படுத்தல்களின்போது மாத்திரம்‌ பங்கேற்கும்‌ குறித்த அதிகாரி கடந்த ஒக்டோபர்‌ 17ஆம்‌ திகதி முதல்‌ சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment