நாட்டை முடக்குவது சாத்தியமற்றது, கொரோனா தாக்கத்தோடு வாழ பழகிக் கொள்ள வேண்டும் - அமைச்சர் சிசிர ஜயக்கொடி - News View

About Us

About Us

Breaking

Saturday, October 31, 2020

நாட்டை முடக்குவது சாத்தியமற்றது, கொரோனா தாக்கத்தோடு வாழ பழகிக் கொள்ள வேண்டும் - அமைச்சர் சிசிர ஜயக்கொடி

(இராஜதுரை ஹஷான்)

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான செயற்திட்டம் இவ்வாரம் முதல் செயற்படுத்தப்படும் என ஆயுர்வேத வைத்தியத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை வழங்குவது குறித்து ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

முழு நாட்டையும் முடக்கி கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவது சாத்தியமற்றது. கொரோனா வைரஸ் தாக்கத்துடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும். 

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மத்தியில் மக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவது குறித்து விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றார்.

No comments:

Post a Comment