திறந்த இந்தோ - பசுபிக் பிராந்தியத்திற்கான பொது இலக்குகள் குறித்து கொழும்பு சந்திப்புகள் அமையும் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 22, 2020

திறந்த இந்தோ - பசுபிக் பிராந்தியத்திற்கான பொது இலக்குகள் குறித்து கொழும்பு சந்திப்புகள் அமையும்

(லியோ நிரோஷ தர்ஷன்) 

இறையாண்மை கொண்ட இலங்கையுடன் கூட்டாண்மையுடைய அமெரிக்காவின் உறுதிப்பாட்டை கோடிட்டுக் காட்டும் வகையிலும் திறந்த இந்தோ - பசுபிக் பிராந்தியத்திற்கான பொது இலக்குகள் குறித்து அவதானம் செலுத்தும் வகையிலுமாகவே அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் ஆர். பொம்மியோ மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் மார்க் டி. எஸ்பர் ஆகியோரின் கொழும்பு சந்திப்புகள் அமையும் என இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் ஆர். பொம்மியோ மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் மார்க் டி. எஸ்பர் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். இந்த விஜயமானது எதிர்வரும் 28 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. 

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் குவாட் என்ற கட்டமைப்பைப்பிற்குள் கூட்டணியமைத்து இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் கூட்டு இராணுவ மூலோபாய நடவடிக்கைளை வலுப்படுத்தி வருகின்றன. 

இதற்கமைவான குவாட் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு ஜப்பானில் கடந்த வாரம் இடம்பெற்றிருந்தது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே தெற்காசியாவிற்கான விஜயத்தை அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் ஆர். பொம்மியோ முன்னெடுத்துள்ளார். 

25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கும் இந்த விஜயம் 30 ஆம் திகதி வரை தொடர்வதுடன், இந்தியா, இலங்கை, மாலைத்தீவு மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கானது என அமெரிக்க இராஜாங்க தினைக்களம் அறிவித்துள்ளது. 

எவ்வாறாயினும் இந்திய விஜயத்தை நிறைவு செய்த பின்னர் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் ஆர். பொம்மியோ மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் மார்க் டி. எஸ்பர் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். 

இதன் போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரை சந்தித்து இராஜாங்க செயலாளர் மைக்கல் ஆர். பொம்மியோ கலந்துரையாட உள்ளார். 

வலுவான இறையாண்மை கொண்ட இலங்கையுடனான கூட்டாண்மையுடைய அமெரிக்காவின் உறுதிப்பாட்டை கோடிட்டுக் காட்டும் வகையிலும் திறந்த இந்தோ - பசுபிக் பிராந்தியத்திற்கான பொது இலக்குகள் குறித்து அவதானம் செலுத்தும் வகையிலுமாகவே அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் ஆர். பொம்மியோ மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் மார்க் டி. எஸ்பர் ஆகியோரின் கொழும்பு சந்திப்புகள் அமையும் என இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment