காலி மீன்பிடி துறைமுகத்தில் பணியாற்றிய ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி - கராபிட்டிய, வைத்தியசாலையில் குறித்த நபர் நேற்றைய தினம் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
காலி பகுதியைச் நேர்ந்த 61 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் வைத்தியசாலையின் அவசர பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது உயிரிழந்துவிட்டதாகவும், பி.சி.ஆர். பரிசோதனைக்காக அவரது உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த நபரின் உடல் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment