தப்பிச் செல்ல முயன்றதன் எதிரொலி - கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 25, 2020

தப்பிச் செல்ல முயன்றதன் எதிரொலி - கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி தனிமைப்படுத்தல் நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்று (25) அதிகாலை அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி தனிமைப்படுத்தல் மையமாக இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டமேற்பட்ட தென் மாகாணத்தை சேர்ந்தவர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து ஒருவர் தப்பிக்க முயற்சித்த நிலையில், பொதுமக்களின் உதவியுடன் அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

இவ்விடயம் மக்களிடையே அச்சத்தையும் தோற்றுவித்திருந்தது. இந்நிலையில், கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பலாலி இராணுவ கட்டளை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment