புலமைப்பரிசில் பரீட்சைக்கு முதன் முறையாக அனுமதி அட்டை - News View

About Us

About Us

Breaking

Thursday, October 1, 2020

புலமைப்பரிசில் பரீட்சைக்கு முதன் முறையாக அனுமதி அட்டை

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்காக விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் முதன்முறையாக பரீட்சை அனுமதி அட்டைகளை வழங்குவதற்கு பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதுவரையில் குறித்த பரீட்சைக்குரிய அனுமதி அட்டைகள் உரிய பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சை அனுமதி அட்டையில் பரீட்சை இலக்கமும் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற வேண்டிய பரீட்சை நிலையமும் குறிப்பிடப்பட்டுள்ளன.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 11ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது. நாடு பூராகவும் 2,936 பரீட்சை நிலையங்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளதோடு, 331,694 மாணவர்கள் இப்பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

சிங்கள மொழி மூலமாக 248,072 விண்ணப்பதாரிகளும், தமிழ் மொழி மூலமாக 83,622 விண்ணப்பதாரிகளும் பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment