எதிர்காலத்தில் கொரோனாவை விட கொடிய தொற்று நோய்கள் நமக்காக காத்திருக்கின்றன : ஐ.நா. வின் அறிவியல் கொள்கை குழு எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, October 31, 2020

எதிர்காலத்தில் கொரோனாவை விட கொடிய தொற்று நோய்கள் நமக்காக காத்திருக்கின்றன : ஐ.நா. வின் அறிவியல் கொள்கை குழு எச்சரிக்கை

எதிர்காலத்தில் கொரோனாவை விட கொடிய தொற்று நோய்கள் நமக்காக காத்திருக்கின்றன என ஐக்கிய நாடுகள் சபையின் அறிவியல் கொள்கை குழு தெரிவித்துள்ளது.

இயற்கையை நாம் நடத்தும் முறையை நாம் மாற்றிக் கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் வரும் தொற்று நோய்கள் இன்னும் ஆபத்தானவையாக இருக்கும் என்றும், தொற்று நோய்கள் அடிக்கடி வரும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பயோ டைவர்சிடி பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் தொடர்பான இடை அரசு அறிவியல் கொள்கை குழு (ஐபிபிஇஎஸ்) எச்சரித்து உள்ளது.

பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் தொடர்பான இடை அரசு அறிவியல் கொள்கை குழு (ஐபிபிஇஎஸ்) என்பது பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகள் தொடர்பான அறிவியல் மற்றும் கொள்கைக்கு இடையிலான இடைவெளியை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். இது ஐக்கிய நாடுகள் அமைப்பால் உருவாக்கப்பட்டது.

ஐ.நா. வின் அறிவியல் கொள்கை குழு தனது அறிக்கையில் கூறி இருப்பதாவது கொரோனா போன்ற தொற்று நோய்கள் அடிக்கடி நிகழும், அதிகமான மக்களைக் கொன்று, உலகப் பொருளாதாரத்திற்கு இன்னும் அதிகமான சேதத்தை உருவாக்கும். இயற்கையை மரியாதையுடன் நடத்துவதில் அடிப்படை மாற்றம் இல்லாவிட்டால் இப்படி கண்டிப்பாக நடக்கும்.

கொரோனா வைரசைப் போலவே விலங்குகளில் இன்னும் 850,000 வைரஸ்கள் உள்ளன என்றும் அவை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும்  அந்த குழு எச்சரித்துள்ளது. 

தொற்று நோய்கள் மனித குலத்திற்கே ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. 1918 இன் இன்ஃப்ளூயன்ஸா பரவியதிலிருந்து, கொரோனா உலகை தாக்கியிருக்கும் ஆறாவது தொற்று நோயாகும் என்றும் இவை அனைத்துக்கும் மனித நடவடிக்கைகளே முழுமையான காரணமாகும்.

காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்புக்கு வழிவகுக்கும் அதே மனித நடவடிக்கைகள்தான், அவை விவசாயத்தில் ஏற்படுத்தும் பாதிப்பின் மூலம் தொற்று அபாயத்தையும் உண்டாக்குகின்றன.

காடுகளின் அழிப்பு, விவசாய விரிவாக்கம், வனவிலங்கு வர்த்தகம் மற்றும் நுகர்வு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் சுரண்டல் ஆகியவை இதில் அடங்கும். 

இவற்றின் மூலம் மனிதர்கள் காட்டு விலங்குகள் மற்றும் வீட்டு விலங்குகளுடன் அதிக அளவில் நெருங்கிய தொடர்பைக் கொள்கிறார்கள். இதனால் விலங்குகளில் இருக்கும் நோய்களுடனும் மனிதர்களுடைய தொடர்பு அதிகரிக்கிறது இதனால் கொடிய நோய்கள் உருவாகின்றன என்றும் அந்த குழு எச்சரித்து உள்ளது.

No comments:

Post a Comment