புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி துரிதமாக நடைபெறுகிறது - அமைச்சர் கெஹலிய - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 28, 2020

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி துரிதமாக நடைபெறுகிறது - அமைச்சர் கெஹலிய

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, 20ஆவது திருத்தச் சட்டமும் புதிய அரசியலமைப்பையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. எதிர்காலத்தில் முழுமையாக புதிய அரசியலமைப்பே கொண்டுவரப்படும். 

இதற்கான 11 பேர் கொண்ட விசேட நிபுணர் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்தப் பணியை வேகமாக செய்து வருகின்றனர். 

20ஆவது திருத்தச் சட்டம் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே கொண்டுவரப்பட்டது. ஒரு வருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment