இங்கிலாந்தில் ஒரு மாத காலத்திற்கு மீண்டும் முழு ஊரடங்கை அமுல்படுத்தினார் பிரதமர் போரிஸ் ஜான்சன் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 31, 2020

இங்கிலாந்தில் ஒரு மாத காலத்திற்கு மீண்டும் முழு ஊரடங்கை அமுல்படுத்தினார் பிரதமர் போரிஸ் ஜான்சன்

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இங்கிலாந்தில் டிசம்பர் 2ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு உள்ளது என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

சீனாவில் தோன்றிய உயிர்கொல்லி கொரானா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.

இங்கு நேற்று ஒரே நாளில் 24 ஆயிரத்து 405 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 9 லட்சத்து 89 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 274 பேர் கொரோனாவுக்கு பலியானதன் மூலம் மொத்த பலி 46 ஆயிரத்தை தாண்டியது.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் ஒரு மாத காலத்துக்கு மீண்டும் முழு ஊரடங்கை அமுல்படுத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது.

கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்த எச்சரிக்கையை தொடர்ந்து ஊரடங்கு குறித்து அரசு பரிசீலிப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இங்கிலாந்தில் டிசம்பர் 2ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு உள்ளது என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment