வட பகுதி கடற்பரப்பில் அத்துமீறும் தமிழக மீனவர்கள் - கொரோனாவால் கடற்படை கைது செய்வதில்லை என்கிறார் அமைசச்ர்டக்ளஸ் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 15, 2020

வட பகுதி கடற்பரப்பில் அத்துமீறும் தமிழக மீனவர்கள் - கொரோனாவால் கடற்படை கைது செய்வதில்லை என்கிறார் அமைசச்ர்டக்ளஸ்

கொரோனா தொற்றைக் கருத்திற் கொண்டு கைது செய்யப்படாமை காரணமாக தென்னிந்திய மீனவர்கள் வட பகுதி கடற்பரப்புக்குள் அத்துமீறி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் தமது கடல் எல்லையைத் தாண்டி, வட மாகாண கடலில் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தீவிரமாகியுள்ளது. கொரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கையாக தமிழக மீனவர்களுடன் எந்தவொரு தொடர்பும் தவிர்க்கப்படுவதால் இலங்கை கடற்படையினர் அத்துமீறும் தமிழக மீனவர்களை கைது செய்வதில்லை.

இதனையடுத்தே இழுவைப் படகுகளை பயன்படுத்தி தமிழக மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment