நாய்களை பாதுகாக்க கோரி இணையத்தளம் ஊடாக சங்கக்காரவின் மகன் மனு தாக்கல்! - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 13, 2020

நாய்களை பாதுகாக்க கோரி இணையத்தளம் ஊடாக சங்கக்காரவின் மகன் மனு தாக்கல்!

நல்ல நண்பனாக ஒரு நாய் குட்டியை பார்ப்பதற்கு பதிலாக வர்த்தக ரீதியாக நாய்களை இனப் பெருக்கம் செய்தல் மற்றும் துன்புறுத்துதலை இலங்கையில் தடை செய்யக் கோரி குமார் சங்கக்காரவின் மகன் இணையத்தளத்தின் ஊடாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்காரவின் மகனான காவித் தமது மனுவில், இலங்கையில் வர்த்தக ரீதியாக நாய்களை இனப் பெருக்கம் செய்வதை தடை செய்யக் கோரியுள்ளதுடன் நாய்களின் ஆரோக்கியம் குறித்தும் அவை துன்புறுத்தப்படுதல் குறித்தும் நாய் வளர்ப்பாளர்கள் குறித்தும் தெரிவித்துள்ளார். 

இது குறித்து குமார் சங்கக்கார தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, எனது மகன் தாக்கல் செய்த மனு தொடர்பில் எம்பார்க் ஸ்ரீலங்கா என்ற அமைப்பு கவனம் செலுத்தியுள்ளது. 

குறித்த அமைப்பு நாட்டில் உள்ள தெரு நாய்களுக்குச் சிறந்த வாழ்கையை உறுதி செய்வதற்காக பல செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. குறித்த அமைப்பின் பணிகள் தொடர வாழ்த்துகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, எம்பார்க் மற்றும் ஒட்டாரா அறக்கட்டளையின் நிறுவனர் ஒட்டாரா குணவர்தன குமார் சங்கக்காரவின் ட்விட்டர் பதிவிற்க்கு பதிலளிக்கும் முகமாக, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான நாய்கள் கூண்டுகளில் அவதிப்படுகின்றன, இனப் பெருக்கம் செய்ய நிர்பந்திக்கப்படுகின்றன, கால்நடை பராமரிப்பு இல்லாமல், நாய்க் குட்டிகளை கடைகளில் விற்கலாம். சட்டங்கள் இல்லை, விதிமுறைகள் எதுவும் இல்லை. இலங்கையர் இலங்கை தெரு நாயைத் தத்தெடுக்கத் தேர்வுசெய்க என பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment