பொதுமக்கள் தினத்தை இணையவழி முறைமையில் மேற்கொள்ள நீதி அமைச்சு நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, October 19, 2020

பொதுமக்கள் தினத்தை இணையவழி முறைமையில் மேற்கொள்ள நீதி அமைச்சு நடவடிக்கை

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் தங்களின் தேவைக்காக நீதி அமைச்சுக்கு வருகை தருவதில் ஏற்படும் சிரமத்தை கருத்திற் கொண்டு அமைச்சின் பொதுமக்கள் தினத்தை இணையவழி (ஒன்லைன்) முறைமையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன.

அதன் பிரகாரம் இன்று திங்கட்கிழமை நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் பொதுமக்கள் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு தெரிவித்திருந்த தங்கள் பிரச்சினை மற்றும் பொது பிரச்சினைகளுக்கு இணையவழி (ஒன்லைன்) முறைமையிலேயே தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.

இதன்போது பொதுமக்கள் தங்களுக்கு முடியுமான பிரதான மூன்று மொழிகளிலும் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை முன்வைத்திருந்தனர். இதன்போது மக்களின் தேவைகளுக்கு ஏற்ற தீர்வுகள் மற்றும் ஆலோசனைகளை அமைச்சர் பெற்றுக் கொடுத்தார்.

எனவே எதிர்வரும் காலங்களிலும் பொதுமக்கள் தங்களுக்கு நீதி அமைச்சு மூலம் தீர்த்துக் கொள்ள தேவையான பிரச்சினைகள் மற்றும் வேறு முறைப்பாடுகள் இருக்குமாயின், https://bit.ly/3lIBFgq என்ற இணையத்தள குறியீட்டுக்கு சென்று பதிவு செய்துகொண்டு, தங்களின் பிரச்சினைகளை முன்வைக்கலாம்.

அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் ஆலோசனைகளை அமைச்சரின் தலைமையில் திங்கட்கிழமைகளில் இடம்பெறும் பொதுமக்கள் தினத்தில் இணையவழி (ஒன்லைன்) ஊடாக தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம். 

முறைப்பாடு மற்றும் பிரச்சினைகளை பொதுமக்கள் வெள்ளிக்கிழமைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment