எக்ஸ்போ லங்கா நிறுவனத்தில் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அந்நிறுவனத்தில் ஏனையோருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எக்ஸ்போ லங்கா நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று சடுதியாகப் பரவத் தொடங்கியதையடுத்து எமது நிறுவன ஊழியர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம்.
அதன்படி பெருமளவில் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் எமது நிறுவனத்தின் பல்வேறு கிளைகளிலும் இருந்து மொத்தமாக 9 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டதுடன் அவர்கள் அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வெளியகத் தரப்பினரிடமிருந்தே வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் என்று கருதுகின்றோம்.
இந்நிலையில் எமது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதியற்றவர்களாக அடையாளங்காணப்பட்டவர்களுக்கு பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
அத்தோடு வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்களும் சுகாதாரப் பிரிவினரின் வழிகாட்டல்களுக்கு அமைவாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் மிகவும் அத்தியாவசியமான ஊழியர்களைத் தவிர ஏனையோருக்கு வீடுகளில் இருந்து வேலைசெய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment