கொரோனா நோயாளிகளுக்கு 2வது முறை தொற்று வந்தால் பாதிப்பு அதிகம் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 13, 2020

கொரோனா நோயாளிகளுக்கு 2வது முறை தொற்று வந்தால் பாதிப்பு அதிகம் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் தொற்று ஒரு முறை வந்து குணமாகி, மீண்டும் தொற்று ஏற்பட்டால் அப்போது பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று அமெரிக்காவின் நெவேடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து, ‘லான்செட் தொற்று நோய்கள்’ பத்திரிகையில் கூறி உள்ளனர்.

இவர்கள் ஆய்வில் 25 வயதான ஒரு நபரை பற்றி குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்காவில் இரண்டாவது முறை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதோடு, இரண்டாவது தடவை அதிக ஆபத்தான வகையில் நோய்ப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

25 வயதான அந்த ஆடவரின் நுரையீல் உடலுக்கு போதுமான ஒட்சிசனைத் தராத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரொனா தொற்று மீண்டும் ஏற்படுவது இன்னும் அரிதான ஒன்றாக உள்ளது.

48 நாள் இடைவெளியில், 2ஆவது முறை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த ஆடவரின் நிலை மோசமடைந்து, அவருக்கு உயிர்வாயு ஆதரவு அளிக்கப்பட்டது.

ஒரு முறை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் இயல்பாகவே நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகும் என்பதற்கு உத்தரவாதம் ஏதும் இல்லை என்பதை அந்தச் சம்பவம் உணர்த்துவதாகக் கூறப்படுகிறது.

இரண்டாவது வைரஸ் தொற்று எத்தனை நாள் நீடிக்கும், ஏன் மறுபடி வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் நிலை முன்னைக்காட்டிலும் மோசமடைகிறது என்பனவற்றைப் புரிந்துகொள்ள இன்னும் கூடுதலான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

மேலும், பெல்ஜியம், நெதர்லாந்து, ஹொங்கொங், ஈக்குவடாரிலும் இப்படி இரண்டாவது முறை கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள், முதல் முறையை விட நோயின் தீவிர தாக்குதலுக்கு ஆளானதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment