கொரோனா தொற்றாளர்கள் பயணித்த பஸ்களின் விபரங்கள் வெளியீடு - 1955 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் - News View

Breaking

Post Top Ad

Thursday, October 15, 2020

கொரோனா தொற்றாளர்கள் பயணித்த பஸ்களின் விபரங்கள் வெளியீடு - 1955 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்

கொரோனா தொற்றாளர்கள் அண்மையில் பயணித்த ஆறு பஸ் வண்டிகளை அடையாளம் கண்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே இதனைத் தெரிவித்துள்ளார்.

அவற்றின் விபரம்: 
ND 4890 - கொழும்பு தொடக்கம் மெதகம 
ND 2350 - மகும்புர தொடக்கம் காலி 
ND 0549 - அம்பலாங்கொடை தொடக்கம் கடவத்தை 
ND 6503 - கொழும்பு தொடக்கம் யாழ்ப்பாணம் 
ND 9788 - எல்பிட்டிய தொடக்கம் கொழும்பு 
NF 7515 - காலி தொடக்கம் கடவத்தை 

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள போக்குவரத்து அமைச்சர், அனைத்து நெடுஞ்சாலை பஸ்களும் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்காணிக்கப்படும். 

சொகுசு பஸ்களை இயக்குபவர்கள் பயணிகளின் பஸ்களில் ஏறுவதற்கு முன்னர் அவர்களின் வெப்பநிலையை சரிபார்க்க வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருந்தால், சுகாதார அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

தற்போது சொகுசு பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான குறைப்பு ஏற்பட்டுள்ளது. பஸ் நடத்துனர்கள் தங்கள் பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் உடல்நலம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார். 

தற்போது பஸ்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட்-19 தொற்று பரவதற்கு முன்னர் நாள் ஒன்றுக்கு 1,600 பஸ்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டன இதில் 25 ஆயிரம் பயணிகள் பயணம் செய்தனர்.

தற்போது பஸ்களின் எண்ணிக்கை 666 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பயணிகளின் எண்ணிக்கை சுமார் 5ஆயிரத்து 691 ஆகும்.

அத்துடன், பயணிகள் சேவைகளைத் தொடர்ந்து மேற்கொள்வதோடு, தொடர்ந்து கொவிட்-19 தொற்று நோயிலிருந்து பயணிகளைப் பாதுகாப்பதே எங்களின் எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்தார்.

இது தவிர, கொரோனா தொற்று குறித்து பஸ் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகள் அல்லது விமர்சனங்களை பொதுமக்கள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் 1955 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad