'இடுகம' கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1659 மில்லியனாக அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 13, 2020

'இடுகம' கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1659 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் 'இடுகம' கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1659 மில்லியனாக அதிகரித்துள்ளது.

பிரதமர் அலுவலகம் 82,906.97 ரூபாவையும், சிறுமி ஆர்.ஜீ.ஐ. சிதுமினி பண்டார 6000 ரூபாவையும், கம்பஹா மாவட்ட சமுர்த்தி அதிகாரிகளின் நலன்புரி சங்கம் 100,000 ரூபாவையும், இலங்கை வங்கியின் ஓய்வூதிய சங்கம் 2,500,000 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர். 

மேற்படி அன்பளிப்புகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வதியும் செட் மற்றும் ஜெட் சகோதரர்கள் 207,851.16 ரூபாவை நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர். அவர்களது தந்தை இந்த அன்பளிப்பு தொகையை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

சங்கைக்குரிய எம்பிலிபிடியே தேஜோசார தேரர் 5,000 ரூபாவையும், இலங்கை தேசிய நிர்மாணத்துறை சங்கம் 4,500,000 ரூபாவையும், ஹெட்டிகொட இன்டஸ்ட்ரீஸ் தனியார் நிறுவனம் 5,000,000 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

Lanka Leyland (Pvt) Ltdநிறுவனம் 5000,000 ரூபாவையும், Colombo International Container Terminals Ltd 800,000 ரூபாவையும்,Taj Bentota Resort & SPA525,892.65 ரூபாவையும், வரையறுக்கப்பட்ட ஓஷன் வீவ் டிவலப்மென்ட் தனியார் நிறுவனத்தின் ஊழியர் நலன் பேணல் சங்கம் 202,600 ரூபாவையும் Vista Lanka Green Globe (Pvt) Ltd 500,000 ரூபாவையும் ஊConsulting Engineers & Architects Associated (Pvt) Ltd 2,504,707.10 ரூபாவையும், நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகார சபை 1,000,000 ரூபாவையும், மூதூர் பிரதேச செயலாளர் அலுவலகம் 39,584.52 ரூபாவையும், திரு.சால்ஸ் பெரேரா 150,000 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

தற்போது இடுகம கொவிட் 19 சுகாதார, பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,659,015,132.02 ரூபாவாகும்.

உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்து வருகின்றனர். காசோலைகள் அல்லது டெலிகிராப்கள் மூலமும் www.itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது #207# என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பங்களிப்பை செய்ய முடியும். 0760700700/ 0112320880/ 0112354340/ 0112424012 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment