கம்பஹா மாவட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,632 ஆக அதிகரித்தது - News View

About Us

About Us

Breaking

Monday, October 19, 2020

கம்பஹா மாவட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,632 ஆக அதிகரித்தது

கம்பஹா மாவட்டத்தில் இன்று மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப் பகுதியில் 39 புதிய கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளனர். 

அவர்களில் 10 பேர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்திலும் மேலும் இருவர் வர்த்தக வலையத்திற்கு வெளியேயும் உள்ள தொழிற்சாலையின் ஊழியர்கள் ஆவர் என கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

அதன்படி, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலிருந்து இதுவரை பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 224 ஆகவும், வர்த்தக வலயத்திற்கு வெளியே பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 22 ஆகவும் காணப்படுகிறது. 

இன்று மாலை 4.00 மணியளவில் கம்பாஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,632 ஆக அதிகரித்துள்ளது. 

அதே நேரத்தில், கொரோனா நோய்த் தொற்றுடைய 25 நோயாளிகள் இன்று கட்டுநாயக்க சீதுவ பொது சுகாதார ஆய்வாளர் பிரிவில் பி.சி.ஆர் சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டனர். 

இவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக திவுலபிட்டியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாக பிரதேச பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment