கற்களுக்குள் மறைத்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக் குற்றிகள் கடத்தல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 28, 2020

கற்களுக்குள் மறைத்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக் குற்றிகள் கடத்தல்

சூட்சுமமாக மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட 10 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக் குற்றிகள் பூநகரி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (27) ஜெயபுரம் காட்டிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சூட்சுமமாக முதிரை மரக் குற்றிகளை ஏற்றியவாறு ரிப்பர் வாகனம் பயணிப்பது தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட சோதனையின்போது குறித்த மரக் குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் பூநகரி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக குறித்த வாகனம் பொலிசாரால் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

இதன்போது, முதிரை மரக் குற்றிகளை கற்களால் மறைத்து சூட்சுமமான முறையில் கடத்த முற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த ரிப்பர் வாகனமும் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டுள்ள முதிரை மரக் குற்றிகளின் பெறுமதி 10 இலட்சம் மதிக்கத்தக்கது எனவும், சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மைய நாட்களாக கிளிநொச்சி, பூநகரி, வவுனியா, மன்னார் பகுதிகளில் சட்டவிரோத மரக்கடத்தல்கள் தொடர்பான விசேட சோதனை நடவடிக்கைகளின்போது, பெறுமதி வாய்ந்த மரக் குற்றிகள் பொலிசாரால் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(பரந்தன் குறூப் நிருபர் - யது பாஸ்கரன்)

No comments:

Post a Comment