தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்குச் சென்ற இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, 100 இற்கும் அதிகமானவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியருடன் தொடர்பில் இருந்த திவுலுபிட்டிய பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவரும் அவருடைய லொறி ஓட்டுனரும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போது அவர்கள் இருவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை நேற்று இனங்காணப்பட்டிருந்தது.
குறித்த இருவரும் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள சுமார் 80 கடைகளுக்கு சென்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, பொருளாதார மத்திய நிலையம் கிருமி தொற்று நீக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த இருவரும் பழகிய தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தைச் சேர்ந்த 100 இற்கும் அதிகமானவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment