MT New Diamond கப்பலின் இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, September 19, 2020

MT New Diamond கப்பலின் இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பு

MT New Diamond கப்பலில் பெறப்பட்ட எண்ணெய் மாதிரிகள் தொடர்பிலான இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை, சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அரச இரசாயன பகுப்பாய்வாளரினால் வழங்கப்பட்ட அறிக்கையே, சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர குறிப்பிட்டார்.

தீ பரவிய கப்பல் இலங்கை கரையிலிருந்து 62 கடல் மைல் தூரத்தில் தற்போது உள்ளதாகவும் அவர் கூறினார். கப்பலை நகர்த்திச் செல்வதற்கான இயலுமை குறித்து ஆராயப்படுகிறது.

தீப்பற்றிய MT New Diamond கப்பல் உள்ள கடற்பிராந்தியத்தில் சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசேட நிபுணர்கள் குழுவினால் தொடர்ந்தும் ஆராயப்படுகிறது.

எனினும், இதுவரை குறித்த கப்பலிலிருந்து கடலுக்குள் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.

No comments:

Post a Comment