மீண்டும் மோதலுக்கு தயாராகும் மைத்திரி - ரணில் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 27, 2020

மீண்டும் மோதலுக்கு தயாராகும் மைத்திரி - ரணில்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் முக்கியமான தகவல்களை வெளியிடக் காத்திருக்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு, எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவையும், ஒக்டோபர் 6ஆம் திகதி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் விசாரணைக்கு அழைத்திருக்கின்றது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் பிரதமர் அமரர் பண்டாரநாயக்கவின் நினைவு நிகழ்வின்போது கலந்துகொண்டிருந்த ஒருசில சுதந்திரக் கட்சி மூத்த உறுப்பினர்களுடன் சந்திப்பை நடத்தியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால, ஈஸ்டர் தாக்குதல் குறித்த முக்கிய தகவல்களை அம்பலப்படுத்தப் போவதாகக் கூறியிருக்கின்றார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை, ஒக்டோபர் 6ஆம் திகதி ஆணைக்குழு முன் ஆஜராகவுள்ள ரணில் விக்கிரமசிங்க, பல இரகசியங்களைப் போட்டுடைக்கப் போகின்றார் என்றும் சிறிகொத்த தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment