நாட்டில் ரின் மீன் உற்பத்தி, வர்த்தகம் பாதிப்படைய நல்லாட்சி அரசே காரணம் - திட்டமிடப்படாத வரி குறைப்பை ரவி மேற்கொண்டதாக பந்துல குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 23, 2020

நாட்டில் ரின் மீன் உற்பத்தி, வர்த்தகம் பாதிப்படைய நல்லாட்சி அரசே காரணம் - திட்டமிடப்படாத வரி குறைப்பை ரவி மேற்கொண்டதாக பந்துல குற்றச்சாட்டு

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அன்றைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கொண்ட வரி குறைப்பு காரணமாகவே நாட்டின் ரின் மீன் உற்பத்தி வர்த்தகம் பெரும் பாதிப்படைந்ததென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு ரின் மீன் இறக்குமதி செய்வதற்காக கடந்த காலங்களில் வருடாந்தம் 2.5 பில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டது. உள் நாட்டிலும் இதற்கு சிறந்த சந்தை வாய்ப்பு இருந்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பல ரின் மீன் உற்பத்தி நிறுவனங்கள் நாட்டில் உருவாக்கப்பட்டன. இதன்மூலம் தரமான ரின் மீன்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கொண்ட நடவடிக்கைகளால் திறந்த இறக்குமதி சூழ்நிலையில் பெரும்பாலனவர்கள் ரின் மீன் இறக்குமதி செய்ய முற்பட்டனர். அதன் விளைவாக உள்ளூர் ரின் மீன் உற்பத்தி தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்காலிக இலாபத்திற்காக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கொண்ட தீர்மானத்தினால் அதற்கான சந்தை பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஹேஷா விதானகே எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment