ராஜித உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை - News View

About Us

About Us

Breaking

Monday, September 7, 2020

ராஜித உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

ராஜித மற்றும் ரூமியிற்கு அழைப்பாணை | Thamil Lanka
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவரை எதிர்வரும் ஒக்டோபர் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (07) அழைப்பாணை அனுப்பி வைத்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு, மோதறை மீன்பிடித் துறைமுகத்தை குறைந்த விலைக்கு தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு விட்டதன் மூலம், அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பான வழக்கு விசாரணை இன்று (07) எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இது தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே மற்றும் அதன் பொது முகாமைத்துவ பணிப்பாளர் நீல் ரவீந்திர முணசிங்க ஆகியோருக்கு இவ்வாறு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment