பொதுமக்கள் குறைகேட்க கிழக்கு மாகாண ஆளுநர் ஏறாவூர் நகர பிரதேசத்திற்கு வருகிறார் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 27, 2020

பொதுமக்கள் குறைகேட்க கிழக்கு மாகாண ஆளுநர் ஏறாவூர் நகர பிரதேசத்திற்கு வருகிறார்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பொதுமக்கள் குறைகேள் சேவையொன்றை நடத்தும் முகமாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் செவ்வாய்க்கிழமை 29.09.2020 ஏறாவூர் நகர பிரதேசத்திற்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் நகர பிரதேசத்திலும் அதனை அண்டிய ஏறாவூர் பற்றுப் பிரதேசத்திலும் பொதுமக்கள் எதிர்கொள்ளக் கூடிய பிரச்சினைகளைப் பற்றி அறிந்து அவற்றுக்குத் தக்க தீர்வு காண்பதற்காகவே ஆளுநரின் இந்த விஜயம் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக பொதுமக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிருவாக ரீதியிலான பிரச்சினைகளை உள்ளடக்கும் இந்த குறைகேள் சேவையில் பொதுமக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆளுநரிடம் முன்வைக்கலாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

அன்றையதினம் காலை ஒன்பது மணி தொடக்கம் முற்பகல் 11 மணி வரை ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் ஆளுநரின் குறைகேள் அமர்வை நடத்த அதிகாரிகள் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment