ஈயை அடிக்க வீட்டை எரித்த முதியவர் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

ஈயை அடிக்க வீட்டை எரித்த முதியவர்

பிரான்ஸ் நாட்டு முதியவர் ஒருவர் ஈ ஒன்றை அடிக்கும் முயற்சியில் தமது வீட்டின் ஒரு பகுதியை தீயிட்டுள்ளார்.

80 வயதுகளில் இருக்கும் அந்த நபர் இரவு உணவு உட்கொள்ளும்போது ஈ ஒன்று தம்மை சுற்றி வந்து தொந்தரவு கொடுத்துள்ளது.

பூச்சுகளைக் கொல்வதற்கான மின்சார துடுப்பை எடுத்து ஈயை இலக்கு வைத்து வீச ஆரம்பித்துள்ளார். ஆனால் அப்போது அவரது வீட்டில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

மின்சார துடுப்பு மற்றும் எரிவாயு இடையே ஏற்பட்ட எதிர்வினை விளைவால் வெடிப்பு ஏற்பட்டு சமையலறை மற்றும் வீட்டின் ஒரு பகுதி கூரை சேதமடைந்துள்ளது. பார்கூலா சனவுட் கிராமத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இதன்போது அந்த முதியவர் கையில் சிறு தீக்காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் அந்த ஈ என்ன ஆனது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. அந்த முதியவர் தற்போது அந்த ஊரில் வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் அவரது வீட்டை புனரமைப்பு செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad