இலங்கைக்கு 340 மில்லியனை வழங்க MT New Diamond கப்பலின் உரியமையாளர்கள் இணக்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 24, 2020

இலங்கைக்கு 340 மில்லியனை வழங்க MT New Diamond கப்பலின் உரியமையாளர்கள் இணக்கம்

தீ விபத்திற்குள்ளான MT New Diamond கப்பலின் உரிமையாளர்கள் இலங்கைக்கு 340 மில்லியன் ரூபா நட்ட ஈட்டை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக, சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி, சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை கப்பலின் உரிமையாளர்களினால் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக, கடற்படை, வான்படை உள்ளிட்ட அனைத்து பிரிவினராலும் மேற்கொள்ளப்பட்ட தீயணைப்பு, மீட்பு, பராமரிப்பு செலவாக ரூபா 340 மில்லியனை (ரூ. 34கோடி) நஷ்டஈடாக செலுத்துமாறு சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா, கடந்த வாரம் கோரிக்கையொன்றை விடுத்திருந்தார்.

குறித்த கப்பல் உரிமை நிறுவன சட்டத்தரணிகளுக்கு அவர் இக்கோரிக்கையை முன்வைத்திருந்ததாக, சட்டமா அதிபரின் இணப்பாளர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment