ர‌ஷிய தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனை தொடங்கியது - 31 ஆயிரம் பேருக்கு செலுத்தப்படும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 9, 2020

ர‌ஷிய தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனை தொடங்கியது - 31 ஆயிரம் பேருக்கு செலுத்தப்படும்

Russia First Batch Of Sputnik V Corona Vaccine Released To Public | World  News
ர‌ஷிய தடுப்பூசியின் 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை நேற்று தொடங்கி உள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் மிக்கேல் முரா‌‌ஷ்கோ அறிவித்துள்ளார்.

உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ர‌ஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கடந்த மாதம் 11ம் திகதி அறிவித்து உலகையே அதிர வைத்தார்.

‘ஸ்புட்னிக்-வி’ என்று அழைக்கப்படுகின்ற இந்த தடுப்பூசியின் முதல் இரு கட்ட மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில், பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை நேற்று தொடங்கி உள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் மிக்கேல் முரா‌‌ஷ்கோ அறிவித்துள்ளார். 

‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசியின் நீண்ட கால பாதுகாப்பு மற்றும் செயல்திறன், இந்த மருத்துவ பரிசோதனையில் தெரிய வரும்.

இந்த தடுப்பூசியை 31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு செலுத்தி சோதிக்கப்படும் என மாஸ்கோவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்று ஏற்கனவே ‘லேன்செட்’ மருத்துவ பத்திரிகை கூறியது நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment