ஜனாதிபதி, பிரதமருக்கு இடையில் காணப்படும் தனிப்பட்ட முரண்பாட்டின் காரணமாகவா? 20 ஆவது திருத்தத்தை கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது - News View

About Us

About Us

Breaking

Friday, September 25, 2020

ஜனாதிபதி, பிரதமருக்கு இடையில் காணப்படும் தனிப்பட்ட முரண்பாட்டின் காரணமாகவா? 20 ஆவது திருத்தத்தை கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது

(செ.தேன்மொழி) 

கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் ஏற்பட்டிருந்த முரண்பாட்டின் காரணமாகவே நாட்டின் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் தற்போதும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் இடையில் காணப்படும் தனிப்பட்ட முரண்பாட்டின் காரணமாகவா? அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தை கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கேள்வி எழுப்பினார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறியதாவது, பொருளாதார நெருக்கடி மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கி வருகின்ற போதிலும், அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றார்கள் என்றால் அதில் காணப்படும் சிக்கல்கள் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். 

இந்நிலையில் 20 ஆம் திருத்தம் தொடர்பில் தற்போது அரசியல்வாதிகள் மாத்திரமின்றி சிவில் அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் அவதானம் செலுத்தியுள்ள நிலையில், ஓய்வுபெற்ற சட்டத்தரணிகளும் தற்போது கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். 

சுபீட்சமான எதிர்காலம் கொள்கைத்திட்டத்தில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய அரசிலமைப்பு வரைபை அடிப்படையாக கொண்டே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது மக்கள் சர்வாதிகார ஆட்சியை விரும்புகின்றார்களா ? என்பதையே பரிசீலனை செய்கின்றனர். இதுவா மக்கள் எதிர்பார்த்த மாற்றம். 

பாராளுமன்றத்தை ஒரு வருடத்தில் ஜனாதிபதியால் கலைக்க முடியும் என்று எண்ணத்தை செயற்படுத்துவதானது, நாட்டுக்கு பாராளுமன்றம் ஒன்று தேவையில்லை என்பதையே காட்டுகின்றது. இது பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி துப்பாக்கி முனையால் அச்சுறுத்துவதற்கு நிகரானது. 

கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் முரண்பட்டுக் கொண்டதன் காரணமாகவே நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிந்தது. 

தற்போதைய அரசாங்கத்திலும் இத்தகைய சிக்கல்கள் காணப்படுவதன் காரணமாகவா 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுர முயற்சித்து வருகின்றார்கள். அதன் காரணமாகத்தான் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு வழங்கிய அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் போன்றோரும் இந்த திருத்தத்திற்கு ஆதரவு வழங்குகின்றார்களா? 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஸ்தாபிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையத்தை நடத்துவதற்கு எவன்காட் நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவா மக்கள் எதிர்மார்த்த மாற்றம். 

எவன்காட் நிறுவனம் தொடர்பான உரிய வழக்கு விசாரணைகளை எமது ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றிருந்தால், அவர்கள் தற்போது சிறையிலேயே இருந்திருப்பார்கள். அதனை செய்ய தவறியமையின் காரணமாகவே தற்போதைய அரசாங்கம் அவர்களுக்கு இவ்வாறான ஒரு இடத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.

No comments:

Post a Comment