சமூக ஊடக நண்பர்கள் வட்டம் நடத்தும் இலக்கிய ஒன்றுகூடல் - 2020 - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 22, 2020

சமூக ஊடக நண்பர்கள் வட்டம் நடத்தும் இலக்கிய ஒன்றுகூடல் - 2020

தமிழ் இலக்கியப் படைப்பாளிகளின் ஒன்றுகூடல் நவம்பர் மாதப் பிற்பகுதியில் ஒரு நாள் நிகழ்வாக (காலை 09.00 முதல் பி.ப. 05.00 மணி வரை) நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (திகதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்)

தமிழில் எழுதும் முன்னோடிப் படைப்பாளிகளுக்கும் புதிய தலைமுறைப் படைப்பாளிகளுக்குமிடையிலான ஓர் இணைப்புப் பாலமாகவும் இலக்கியப் படைப்புகள் குறித்துப் பரஸ்பரம் அறிமுகம் மற்றும் கருத்துக்கள் பரிமாறும் தளமாகவும் இந்த ஒன்றுகூடல் அமைய இருக்கிறது.

நிகழ்வை நடத்துவோர், அழைக்கப்படும் முன்னோடிப் படைப்பாளிகள் தவிர்ந்த 75 பேர் நிகழ்வில் கலந்து கொள்ள முடியும்.

பிரதான நோக்கங்கள்

சமூக ஊடகங்களில் புதிதாகப் பலர் எழுத ஆரம்பித்துள்ளனர். அவர்கள் சரியான முறையில் நெறிப்படுத்தப்படும்போது நல்ல இலக்கிய அறுவடையைப் பெற முடியும்.

நூல்களை எழுதி வெளியிட்டும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருப்போரைப் பரவலான கவனத்துக்குக் கொண்டு வருவது.

நிகழ்ச்சி நிரலில்…

முன்னோடி இலக்கியப் படைப்பாளிகள் தமது இலக்கிய அனுபவங்களைப் பகிர்தல்.

பங்கு கொள்ளும் இலக்கியப் படைப்பாளிகள், ஆர்வலர்கள் தம்மை அறிமுகம் செய்து கொள்ளுதல்.

இளைய தலைமுறைப் படைப்பாளிகளின் இலக்கியப் படைப்புகளை முன்னோடி எழுத்தாளர்கள் திறனாய்வு செய்தல்.
 
என்ற வகையில் இந்த ஒன்றுகூடல் அமைவதுடன் கலந்துரையாடலும் இடம்பெறும்.

கலந்துகொள்ள விரும்புவோர் பின்வரும் அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

1. இங்கு தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள படிவத்தை நிரப்ப வேண்டும். (விண்ணப்பத்தையும் இணைய இணைப்பிலேயே பூர்த்தி செய்யலாம்)

2. தமது படைப்புத் திறனாய்வுக்கு உள்ளாக வேண்டும் என்று விரும்புபவர்கள் இரண்டு கவிதைகள், ஒரு சிறுகதை ஆகியவற்றுக்கு மேற்படாமல் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுவிட்டு அனுப்பலாம்.

(கவிதை மாத்திரம் எனில் மூன்று கவிதைகள், சிறுகதைகள் மாத்திரம் எனில் இரண்டு சிறுகதைகள், நூல் எனின் ஒரு நூலை அனுப்பி வைக்க முடியும்)

3. திறனாய்வுக்கு அனுப்பாமலும் எந்த ஒரு இலக்கியப் படைப்பாளியும் இலக்கிய ஆர்வலரும் நிகழ்வில் கலந்துகொள்ள முடியும். ஆனால் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது முக்கியமாகும்.

4.  நிகழ்வுகள் உரிய நேரத்தில் ஆரம்பமாகும். ஆகவே தாமதங்களைத் தவிர்த்துக் கொள்வதும் வந்த பின் பாதியில் கிளம்பி விடுவதும் தவிர்க்கப்படல் வேண்டும்.

5. காலை, மாலைத் தேனீர், மதிய உணவு ஆகியன வழங்கப்படும்.

(ஒருவருக்கான மதிய உணவை 200 ருபா செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டும். விண்ணப்பங்களின் அடிப்படையில் உணவு ஏற்பாடு செய்யப்படும்)

6. துணையோடு வருவோர் சிறுவர்களை அழைத்து வருவதைத் தயவுசெய்து தவிர்த்துக் கொள்ளவும்.


7. படைப்பாக்கங்களையும் மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்புவது விரும்பத் தக்கது.

போனில் படமெடுத்து அனுப்பப்படும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மின்னஞ்சல் செய்வதற்கு வாய்ப்பற்றவர்கள் தபாலிட்டு விட்டு தகவல் தரலாம்.

இலக்கிய ஒன்றுகூடலில் பங்குபற்ற விரும்பின் பின்வரும் இணைப்பிலுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.


தொடர்புகளுக்கு

தொடர்பிலக்கம்: 078 810 2244

மின்னஞ்சல் முகவரி: ashroffshihabden@gmail.com

தபால் முகவரி: 37, Dhankanatta Road, Mabola, Wattala.

No comments:

Post a Comment