இலங்கையில் கொரோனா தொற்றிய 13ஆவது நபர் மரணம் - பஹ்ரைனிலிருந்து வந்த 60 வயது ஆண் - News View

About Us

About Us

Breaking

Monday, September 14, 2020

இலங்கையில் கொரோனா தொற்றிய 13ஆவது நபர் மரணம் - பஹ்ரைனிலிருந்து வந்த 60 வயது ஆண்

13ஆவது மரணம் பதிவு; பஹ்ரைனிலிருந்து வந்த 60 வயது ஆண்-13th COVID19 Death-60-Yr-Old-Bahrain Returnee-Chilaw Base Hospital
இலங்கையில் 13ஆவது கொவிட்-19 நோய் காரணமான மரணம் பதிவாகியுள்ளது.

கடந்த செப்டெம்பர் 02ஆம திகதி பஹ்ரைனிலிருந்து வந்த 60 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர உறுதிப்படுத்தியுள்ளார்.

சிலாம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்தநபர், மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் 02ஆம் திகதி பஹ்ரைனிலிருந்து வந்த குறித்த நபர், கடல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர் எனவும், இலங்கை வந்த அவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்படாத நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கடந்த செப்டெம்பர் 09ஆம் திகதி சிலாபம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர், இன்றையதினம் (14), மரணமடைந்துள்ளார். அவரது மரணத்திற்கான நெருங்கிய காரணம் மாரடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக கடந்த ஓகஸ்ட் 23ஆம் திகதி இலங்கையில் 12ஆவது கொரோனா மரணம் பதிவாகியிருந்தது.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமான மரணங்கள்
1ஆவது மரணம் கடந்த மார்ச் 28ஆம் திகதி, 60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

2ஆவது மரணம் கடந்த மார்ச் 30ஆம் திகதி, நீர்கொழும்பு, போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர்.

3ஆவது மரணம் ஏப்ரல் 01ஆம் திகதி, 73 வயதான மருதானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

4ஆவது மரணம் ஏப்ரல் 02ஆம் திகதி, 58 வயதான இரத்மலானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

5ஆவது மரணம், ஏப்ரல் 04ஆம் திகதி, 44 வயதான, ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

6ஆவது மரணம், ஏப்ரல் 07ஆம் திகதி, 80 வயதான, தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

7ஆவது மரணம், ஏப்ரல் 08ஆம் திகதி, 44 வயதான, கல்கிஸ்ஸையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

8ஆவது மரணம், மே 04ஆம் திகதி, 72 வயதான, குருணாகல், பொல்பிதிகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.

9ஆவது மரணம், மே 05ஆம் திகதி, 52 வயதான, கொழும்பு 15, மோதறையைச் சேர்ந்த பெண் ஒருவர்.

10ஆவது மரணம், மே 25ஆம் திகதி, 51 வயதான, குவைத்திலிருந்து வந்த, பயாகலையைச் சேர்ந்த பெண் ஒருவர்.

11ஆவது மரணம், ஜூன் 01ஆம் திகதி, 45 வயதான, குவைத்திலிருந்து வந்து ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவர்.

12ஆவது மரணம், ஓகஸ்ட் 23ஆம் திகதி, 47 வயதான, இந்தியாவிலிருந்து வந்து IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர்.

13ஆவது மரணம், செப்டெம்பர் 14ஆம் திகதி, 60 வயதான, பஹ்ரைனிலிருந்து வந்து சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவர்.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 3,234 பேரில் தற்போது 217 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இதுவரை 3,005 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இதுவரை 12 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 56 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment