தலைக்கவசத்திற்கு பதிலாக தகர டின்னைதான் தலையில் மாட்டிக் கொள்ள வேண்டும் - ரணில் - News View

About Us

About Us

Breaking

Monday, August 3, 2020

தலைக்கவசத்திற்கு பதிலாக தகர டின்னைதான் தலையில் மாட்டிக் கொள்ள வேண்டும் - ரணில்

பொருளாதாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக வாக்களிக்க வேண்டிய ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சி என அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மொரட்டுவையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தற்போது நாடு அடகு வைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி எல்லாம் நிறுத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்று கூட வாங்க முடியாத நிலை ஏற்படும். 

இலங்கையில் கையடக்க தொலைபேசி தயாரிக்க முடியுமா? ஹலோ சார் என்று தான் கூற வேண்டி வரும். தலைக்கவசத்திற்கு பதிலாக தகர டின்னைதான் தலையில் மாட்டிக் கொள்ள வேண்டும். நாம் அந்த இடத்துக்கு செல்வது நல்லதல்ல.

இந்த நாட்டை காப்பாற்றக்கூடிய ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சி மாத்திரமே. எமது தரப்பினர் காலை இழுத்து விட்டாலும் நாங்கள் ஓடுவோம். வீட்டு பொருளாதாரத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றார். 

இளைஞர்கள் தங்கள் எதிர்காலம் தொடர்பாக சிந்தித்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் முடிவை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களை விட இன்று இளைஞர்கள் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர். இலங்கை ஏன் வளர்ச்சியடையவில்லை, அரசியல்வாதிகள் ஏன் அதிக நன்மைக்காக ஒன்றிணைக்க முடியாது என்பது போன்ற பல கேள்விகள் மக்களின் மனதில் உள்ளன. 

இருப்பினும் இப்போது நாடு கொரோனா வைரஸ் தொற்றுநோயின் அச்சுறுத்தலை எதிர்கொள்வது மட்டுமல்லாமல் பொருளாதார சரிவின் விளிம்பிலும் உள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பல இளைஞர்கள் வாக்களித்தனர், இருப்பினும் அவர்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளது. 

ஆகவே இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க சரியான முடிவை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். முன்னணி நாடாக கட்டியெழுப்புவதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அவசியமாகும் என்றார். 

No comments:

Post a Comment