
கணேமுல்ல, கலஹிட்டியாவ பகுதியில் முகக் கவசத்திற்குள் மறைத்து சூட்சுமான முறையில் எடுத்துச் செல்லப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (30) மாலை கணேமுல்ல குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது முகக் கவசத்துக்குள் இருந்து 7 ஹெரோயின் பைக்கற்றுக்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 36 வயதுடையவர் என்பதுடன் அவரும் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரிய வந்துள்ளது.
அவர் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இந்த போதை பொருளை விற்பனை செய்ய தயாரானதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணைகளை கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment