ஐக்கிய மக்கள் சக்தியின் பெயரில் வெளியாகிவரும் தேசியப் பட்டியல் விபரம் போலியானது - சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Saturday, August 8, 2020

ஐக்கிய மக்கள் சக்தியின் பெயரில் வெளியாகிவரும் தேசியப் பட்டியல் விபரம் போலியானது - சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தியின் பெயரில் வெளியாகிவரும் தேசியப் பட்டியல் விபரம் போலியானதென கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் கொழும்பில் நேற்று காலை விசேட பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, இன்னும் தேசியப்பட்டில் இறுதிப்படுத்தவில்லை என கூறியுள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை இன்று அல்லது நாளை தேர்தல் ஆணைக்குழுவுக்கு பெற்றுத்தருவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை பொதுத் தேர்தலில் 2,771,980 வாக்குகளை பெற்று 47 ஆசனங்களை கைப்பற்றியது.

அதன்படி, அவருக்கு தேசியப் பட்டியலில் 7 ஆசனங்கள் கிடைக்கப் பெற்ற நிலையில், ஆசனங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வது தொடர்பான கலந்துரையாடல் தற்போதைய நிலையில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment