சவால்களுக்கு மத்தியிலும் அமைதியான, ஒழுங்கான முறையில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை அரசுக்கு அமெரிக்கா பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடந்து முடிந்துள்ள பொதுத் தேர்தல் தொடர்பாக சவால்களுக்கு மத்தியிலும் அமைதியான, ஒழுங்கான முறையில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை அரசுக்கு அமெரிக்கா பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடந்து முடிந்துள்ள பொதுத் தேர்தல் தொடர்பாக அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஆகஸ்ட் 05 ஆம் திகதி இலங்கை மக்கள் அடிப்படை ஜனநாயக உரிமையை பயன்படுத்தி, தங்களது அடுத்த பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்காக வாக்களித்தனர்.
கோவிட் 19 தொற்றுப் பரவலினால் முகங்கொடுக்க நேர்ந்த சவால்களுக்கு மத்தியிலும் கூட அமைதியான மற்றும் ஒழுங்கான முறையில் தேர்தலை நடத்தியமை தொடர்பில் இலங்கையை அமெரிக்கா பாராட்டுகிறது.
புதிய பாராளுமன்றம் கூடுகின்ற நிலையில், அனைவரையும் உள்வாங்கிய பொருளாதார மீட்சியை கட்டியெழுப்புவதற்கும் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்குமான தமது உறுதிப்பாடுகளை புதிய அரசாங்கம் புதுபிக்கும் என்று நாம் நம்புகிறோம்.
அரசாங்கத்துடனும் புதிய பாராளுமன்றத்துடனும் இணைந்து பணியாற்ற நாம் எதிர்பார்க்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment