கண்டி மாவட்டத்தில் எனக்கு எதிராக கூட்டு சதி - வேலுகுமார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 4, 2020

கண்டி மாவட்டத்தில் எனக்கு எதிராக கூட்டு சதி - வேலுகுமார்

கண்டியில் நானே தமிழ் வெற்றி ...
"கண்டி மாவட்டத்தில் எனது வெற்றி உறுதியான நிலையில், அதனை எப்படியாவது தடுத்துவிட வேண்டும், சில நூறு ஓட்டுக்களையாவது உடைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வங்குரோத்து அரசியல்வாதிகள் இறுதிகட்டத்தில் நயவஞ்சக அரசியலை முன்னெடுத்துள்ளனர். கொள்கை ரீதியாக மோத துணிவில்லாமல் இவ்வாறு சேறு பூசும் அரசியலில் ஈடுபடுவது ஒரு சமூகமாக நாம் வெட்கப்பட வேண்டிய நடவடிக்கை. எனக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் திட்டமிட்ட அடிப்படையில் போலியான தகவல்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. மக்கள் இவற்றை கண்டு குழப்பமடைய தேவையில்லை” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று (04.08.2020) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, "பொதுத்தேர்தலுக்கான அமைதிகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் தேர்தல் சட்டதிட்டங்களைமீறியும், தனிநபரை இலக்கு வைத்தும் சமூகவலைத்தலங்களில் மோசடியான முறையில் பொய்யான, சித்தரிக்கப்பட்ட செய்திகள் பரப்பட்டுவருகின்றன.

மலையக மக்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் நான் தொலைபேசியில் உரையாடுவதுபோல காணொலியொன்று போலியாக உருவாக்கப்பட்டு வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகின்றது. அதேபோல் வீட்டுதிட்டம் குறித்தும் மோசடியான முறையில் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அரசியலில் ஜனநாயகமுறையில் மோதமுடியாத வங்குரோத்து அரசியல்வாதிகளே தோல்வி பயத்தில் இவ்வாறு சேறுபூசி, குறுக்குவழியில் சாதிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.

கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாமல்செய்வதற்கு பேரினவாதிகள், கைக்கூலிகள்மூலம் மோசடி அரசியலை கையில் எடுத்துள்ளனர். எனவே, மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.” – என்றார்.

No comments:

Post a Comment