
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் பிரதான வாக்கெண்ணும் நிலையங்களான மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மகஜன கல்லூரி ஆகியவற்றிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 428 வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் செவ்வாய்க்கிழமை காலை எடுத்துச் செல்லப்பட்டன.
மட்டக்களப்புத் தொகுதியில் 194 வாக்கெடுப்பு நிலையங்களும், கல்குடா தொகுதியில் 119 வாக்கெடுப்பு நிலையங்களும், பட்டிருப்புத் தொகுதியில் 115 வாக்கெடுப்பு நிலையங்களுமாக மொத்தம் 428 வாக்கெடுப்பு நிலையங்கள் தயார் நிலையில் உள்ளன.
வாக்குச் சாவடிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் 57 நடமாடும் பொலிஸ் பிரிவுகளும் செயற்பட்டு வருகின்றன.
இது தவிர இத்தேர்தல் கடமைகளுக்காக 307 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றது. இவற்றில் இம்மாவட்டத்தைச் சேர்ந்த அரச திணைக்கள வாகனங்கள் 159, பிற மாவட்ட அரச வாகனங்கள் 54 ஏனையவை வாடகைக்கு அமர்த்தப்பட்ட தனியார் வாகனங்களாகும்.
தேர்தல் பணியில் அரச உத்தியோகத்தர்கள் பொலிஸார் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.





No comments:
Post a Comment