பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பிரதி முதற்கோலாசான்களாக (கொரடா) பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா மற்றும் ஜயந்த கெட்டகொட ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், ஆளும் கட்சியின் உதவி முதற்கோலாசான்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஷ்பகுமார, மொஹம்மட் முஸம்மில் மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பதவிகள் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்ட பதவிகளாகும்.
பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா மற்றும் ஜயந்த கெட்டகொட ஆகியோர் ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ முன்னிலையில் நேற்று (21) பதவியேற்றுக் கொண்டனர்.
அத்துடன், ஜகத் புஷ்பகுமார, மொஹமட் முஸம்மில் மற்றும் அசங்க நவரத்ன ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.
No comments:
Post a Comment