தரம் ஒன்றில் 40 மாணவர்களை இணைக்க நடவடிக்கை - சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 4, 2020

தரம் ஒன்றில் 40 மாணவர்களை இணைக்க நடவடிக்கை - சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி

அடுத்த வருடம் முதல் தரம் ஒன்றில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான அனுமதியை சட்டமா அதிபர் திணைக்களம், கல்வி அமைச்சிற்கு வழங்கியுள்ளது.

கல்வி அமைச்சினால் ஆசிரியர் உதவியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சின் செயலாளர், என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெருமவின் அறிவுறுத்தலுக்கு அமைய, இது தொடர்பில் பாடசாலை அதிபர்கள் மற்றும் பிரதானிகளுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த அறிவித்துள்ளார்.

தரம் ஒன்றிற்கு ஆசிரிய உதவியாளர்கள் 02 பேர் நியமிக்கப்படுவார்கள் என்பதோடு, தரம் 03, 04, 05 களுக்கு தலா ஒருவர் வீதம் நியமிக்கப்படுவார்கள். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர், இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என, அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment