07 வேட்பாளர் உட்பட 440 பேர் கைது - 124 வாகனங்கள் பறிமுதல் - 94 முறைப்பாடுகள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 4, 2020

07 வேட்பாளர் உட்பட 440 பேர் கைது - 124 வாகனங்கள் பறிமுதல் - 94 முறைப்பாடுகள்

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவுற்ற நேரம் முதல் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின்படி 07 வேட்பாளர்கள் உட்பட 440 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ஜாலி சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்த நேரம் முதல் இதுவரை தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 93 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் 440 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேபோன்று 124 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவற்றில் மூன்று அரச வாகனங்களும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்தார்.

தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நேற்று மூன்றாம் திகதி முதல் நாடு முழுவதும் விஷேட நடமாடும் பாதுகாப்பு சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக தேர்தல் முடியும் வரை எந்தவிதமான மன்னிப்பும் வழங்கப்படமாட்டாதென்றும் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த 02 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தன. அதன் பின்னர் 357 தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பான முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment