சமூக ஊடகங்களில் MCC தொடர்பாக பொய்யான தகவல்கள் நம்பவேண்டாம் என்கிறார் அஜித் கப்ரால் - News View

About Us

About Us

Breaking

Friday, July 3, 2020

சமூக ஊடகங்களில் MCC தொடர்பாக பொய்யான தகவல்கள் நம்பவேண்டாம் என்கிறார் அஜித் கப்ரால்

எம்.சி.சி உடன்படிக்கையில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் கைச்சாத்திடுவதற்கு முயன்றதாக சமூக ஊடக பதிவுகளில் வெளியான செய்திகளில் உண்மையில்லையென முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் MCC உடன்படிக்கை குறித்து அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டிற்கு வரமுயன்றார் என தெரிவிக்கப்படுவதை நம்பவேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். 

2004 இல் MCCயின் சில திட்டங்களிற்கு அமெரிக்கா நிதியை வழங்குவதற்கு முன்வந்ததாக கப்ரால் தெரிவித்துள்ளார். இந்த உதவித் திட்டத்தில் என்ன விடயங்கள் இடம்பெற வேண்டும் என 2006 இல் பேச்சுக்கள் இடம்பெற்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விக்கிலீக்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் 2006 பேச்சுவார்த்தைக்கும் 2019 இல் நல்லாட்சி அரசாங்கம் இணங்கிய விடயத்திற்கும் இடையில் பாரிய வித்தியாசம் உள்ளதை வெளிப்படுத்தியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை ஆபத்திற்குள்ளாக்கும் எந்த நடவடிக்கைக்கும் மகிந்த ராஜபக்ச அரசாஙகம் இணங்கியிராது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment