அனுராதபுரம் மாவட்ட முஸ்லிம் சமூகத்தினர் பெரும்பான்மை சமூகத்தினருடன் சேர்ந்து இம்முறையும் ஐக்கிய மக்கள் சக்தி மூலம் சிறுபான்மை பிரதிநித்துவத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான வாய்ப்பைத் தவறவிடக் கூடாது. இத்தேர்தலில் சிறுபான்மையினர் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ஏ.ஆர்.இஷாக் தெரிவித்தார்.
மதவாச்சி பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட உடும்புகளவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் சிறுபான்மை சமூகத்தினரைப் பொறுத்தவரை இது முக்கியமான தேர்தலாகும்.
சிறுபான்மை பிரதிநிதித்துவம் இல்லாமல்பெரும் சிரமப்பட்ட இம்மாவட்ட மக்கள் கடந்த 2015 பாராளுமன்ற தேர்தலில் ஒற்றுமைப்பட்டு ஒரு எம்பியைப் பெற முடிந்தது.
இப்பிரதிநிதித்துவத்தை நாம் தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். எமது வாக்குகளை சிதறடிக்காது தூர நோக்குடன் சிந்தித்து புத்திசாதுர்யத்துடன் வாக்களிப்பதன் மூலம் மீண்டும் எமது பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க முடியும்.
பாரபட்சம் பாராது கடந்த காலத்தில் பல கிராமங்களிலும் என்னால் சேவையாற்ற முடிந்தது. இருந்த போதும் இன்னும் பல வேலைகறைச் செய்ய வேண்டியுள்ளது. இந்த இலக்கை அடைந்து கொள்வதில் நமது மக்கள் ஒற்றுமையாகப் பங்காற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.
(அநுராதபுரம் மேற்கு நிருபர்)
No comments:
Post a Comment