சுதந்திர கட்சியை விமர்சித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள கிடைத்துள்ள கடைசி சந்தர்ப்பத்தை கைநழுவிட வேண்டாம் - அமைச்சர் மஹிந்த அமரவீர - News View

About Us

About Us

Breaking

Sunday, July 5, 2020

சுதந்திர கட்சியை விமர்சித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள கிடைத்துள்ள கடைசி சந்தர்ப்பத்தை கைநழுவிட வேண்டாம் - அமைச்சர் மஹிந்த அமரவீர

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து உறுப்பினர்களும் வாத, விவாதங்களின்றி ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள கிடைத்துள்ள கடைசி சந்தர்ப்பத்தை கைநழுவ இடமளிக்க வேண்டாமென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விமர்சிப்பவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

அகுணுகொலபெலஸ்ஸவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் மிகவும் தீர்மானமிக்கது. இத்தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெறுவதும் உறுதி. அதில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சிலர் விமர்சிக்கின்றனர்.

சில வேதனைகள் காரணமாகவே அவர்கள் சுதந்திரக் கட்சியை விமர்சிக்கின்றனர். சுதந்திரக் கட்சியை விமர்சிப்பவர்களுக்கு தமது தாய் கட்சியும் சுதந்திரக் கட்சிதான் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவானதும் அமைச்சுப் பதவிகளை வகித்ததும் சுதந்திரக் கட்சியின் மூலம்தான். 

ஜனாதிபதியும் பிரதமரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுதந்திரக் கட்சியை விமர்சித்ததில்லை. இந்தக் கட்சி பெறுமதியானதென அவர்களுக்குத் தெரியும். நாம் முட்டி மோதிக்கொண்டால் அதன் பலன் யாருக்கு கிடைக்கும்? எதிர்க்கட்சிக்குதான் கிடைக்கும் என்பதை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும். 

சிலவேளை, 2020ஆம் ஆண்டு தேர்தல்தான் ஒரு தனிக் கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் வகையில் கிடைத்துள்ள கடைசி தேர்தலாகக் கூட இருக்க முடியும். அதற்கு காரணம் அனைத்து மக்களினதும் பிரச்சினைகளை புரிந்துகொள்ளக்கூடிய ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளமையாகும். 

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள கிடைத்துள்ள இந்த கடைசி சந்தர்ப்பத்தை கைநழுவிட வேண்டாமென சுதந்திரக் கட்சியை விமர்சிப்பவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment