மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான இப்திகார் ஜெமீல் கூறினார்.
பேருவளை மருதானை பீ.ஆர். வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற கட்சி முக்கியஸ்தர்களுடனான விசேட சந்திப்பில் பேசும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, முன்னாள் எம்.பி.அஸ்லம் ஹாஜியார் உட்பட பலரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேசிய இப்திகார் ஜமீல், சஜித் பிரேமதாச தலைமையில் ஆகஸ்ட் 6ஆம் திகதி பலமான அரசாங்கமொன்றை அமைப்போம்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியை உடைக்க முயன்றாலும் கூட மக்கள் எம்மோடு கைகோர்த்துள்ளனர். வேட்பாளர்கள் ஒரு சிலர் விலகினாலும் கூட ஆதரவாளர்கள் எம்முடனே உள்ளனர்.
நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி அமோக வெற்றியீட்டும். நாம் சக்தி மிக்க ஆட்சியை அமைப்போம். சிறுபான்மை சமூகங்களின் பூரண நம்பிக்கையைக் கொண்ட அரசியல்வாதியாக சஜித் பிரேமதாஸ விளங்குகிறார்.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது மீண்டும் அரசாங்கம் மக்கள் ஆணையை வேண்டி நிற்கிறது. அவர்களின் போலி வாக்குறுதிகளை நம்பி விடாதீர்கள் என்றும் அவர் கூரினார்.
களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மூலம் சிறந்த வேட்பாளர்கள் குழுவொன்று போட்டியிடுகிறது. சஜித் பிரேமதாஸவை பிரதமராக்க வேண்டி ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு பூரண ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.
பேருவளை விசேட நிருபர்
No comments:
Post a Comment