பரீட்சைகள் நடத்தப்படும் தினங்கள் தொடர்பில் அடுத்த வாரம் இறுதித் தீர்மானம் - அமைச்சர் பந்துல - News View

About Us

About Us

Breaking

Friday, July 3, 2020

பரீட்சைகள் நடத்தப்படும் தினங்கள் தொடர்பில் அடுத்த வாரம் இறுதித் தீர்மானம் - அமைச்சர் பந்துல

பரீட்சைகள் நடத்தப்படும் தினங்கள் தொடர்பில் அடுத்த வாரம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்றுமுன்தினம் தெரிவித்தார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், அமைச்சரவையில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் அமைச்சர் டளஸ் அழகப்பெரும, பரீட்சைகள் நடத்தப்படும் தினம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடினார். 

அதன்போது மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராகுவதற்கான கால அவகாசத்தை முகாமைத்துவம் செய்து பரீட்சைகளை நடத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கல்வி அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார். 

அதற்கிணங்கவே அது தொடர்பில் தாம் அடுத்த வாரம் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 

அதேவேளை, சுகாதாரத்துறையினரின் ஆலோசனைக்கிணங்க முதலாம் இரண்டாம் ஆண்டு மாணவர்கள முகக் கவசம் அணியும்போது எதிர்கொள்ள நேரும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டே முன்பள்ளி மற்றும் முதலாம் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார். 

எவ்வாறெனினும் மாணவர்களின் உயிர் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டியது முக்கியம் என்றும் பிள்ளைகளுக்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் உணர்ச்சிவசப்பட்டு மேற்கொள்ளக் கூடாது என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment