மட்டக்களப்பில் நிர்மாண தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 1, 2020

மட்டக்களப்பில் நிர்மாண தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கட்டிட நிர்மாணங்களுக்குப் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களான கல், மண், சீமெந்து, கொங்ரீட் போன்றவற்றின் தரம் மற்றும் விவசாய நிலம் உட்பட ஏனைய நிலங்களின் மண், மணல் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கையிடும் நிர்மாண தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடத்திற்கான புதிய கட்டிடம் புதன்கிழமை 01.7.2020 திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இப் புதிய ஆய்வுகூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் சுமார் 3.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மேலும் இப்பரிசோதனையூடாக விவசாய மண்ணின் தரத்தினை பரிசோதனை செய்து அந்நிலத்துக்குப் பொருத்தமாக பயிர்வகையினை செய்கை செய்வதற்குமான ஆலோசனை வழிகாட்டல்களும் இதனூடாகப் பெற்றுக் கொள்ளமுடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் பிரதேச விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் அமைந்துள்ள கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடங்களில் மொனராகல, வவுனியா ஆகிய பிரதேசங்களுக்கு மேலதிகமாக கிழக்குப் பிராந்தியத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களுக்காக இவ்வாய்வுகூடம் மட்டக்களப்பில் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கமநல அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் நாயகம் டப்ளியு.எம்.எம்.பி. வீரசேகர அதிதியாக கலந்துகொண்டு இக்கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

நிகழ்வில் கமநல அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் கே. ஜெகநாத் பிரதி ஆணையாளர் நாயகம் ஏ.எச்.எம்.எல். அபேரத்ன, நீர் முகாமைத்துவப் பொறியியலாளர் டீ.டீ. பிரபாத்விதாரண, மாவட்ட விவசாயத் திணைக்கள பிரதி விவசாய பணிப்பாளர் வி. பேரின்பராஜா, மட்டக்களப்பு மத்தி வலயம் உதவி விவசாய உதவிப் பணிப்பாளர் எஸ். சித்திரவேல் மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் ஆகியோர்கலந்துகொண்டதுடன் வளாகத்தில் தென்னை மரக்கன்றுகளும் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தது.

No comments:

Post a Comment