84 வயது ஆசிரியையிடமிருந்து கொவிட் ஒழிப்புக்கு 2 இலட்சம் ரூபா நிதி - “சட்டம், நீதி, தர்மத்தை பாதுகாக்கின்ற அரசாங்கம் தன்னிறைவடைந்த நாடொன்றை எமக்கு கையளியுங்கள்” என வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 7, 2020

84 வயது ஆசிரியையிடமிருந்து கொவிட் ஒழிப்புக்கு 2 இலட்சம் ரூபா நிதி - “சட்டம், நீதி, தர்மத்தை பாதுகாக்கின்ற அரசாங்கம் தன்னிறைவடைந்த நாடொன்றை எமக்கு கையளியுங்கள்” என வேண்டுகோள்

புத்தளம், காக்கா பள்ளி, மனங்குளத்தில் வசிக்கும் 84 வயதான திருமதி எம்.ஏ.எச்.பி. மாரசிங்க ஓய்வுபெற்ற ஆசிரியை இரண்டு இலட்சம் ரூபாய்களை கொவிட் நிதியத்திற்கு ஜனாதிபதியிடம் கையளித்தார்.

பொதுஜன முன்னணியில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று (06) புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் செய்து, மாதம்பை தனிவெல்லே பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்த அன்பளிப்பு கையளிக்கப்பட்டது.

அந்த ஆசிரியை ஐயாயிரம் ரூபாய் நோட்டுகளை ஒன்று சேர்த்து வழங்கிய இரண்டு இலட்சம் ரூபாவை சுற்றிய கடதாசியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

கொவிட் 19 சமூக பாதுகாப்பு ஜனாதிபதி நிதியம்
அன்பளிப்பு வழங்குகிறேன்

ரூபா இரண்டு இலட்சம்

ஜனாதிபதி அவர்களே,

“சட்டம், நீதி, தர்மத்தை பாதுகாக்கின்ற அரசாங்கம், தன்னிறைவடைந்த நாடொன்றை எமக்கு கையளியுங்கள்”

M.A.H.P. மாரசிங்க
ஓய்வு பெற்ற ஆசிரியை (வயது 84)
"சுதர்மா"
மனங்குளம்
காக்கா பள்ளி

No comments:

Post a Comment