குருணாகலில் உள்ள புவனேக ஹோட்டலினால் பராமரிக்கப்பட்டு வந்த கட்டடம் இடிக்கப்பட்டமை தொடர்பான இடைக்கால அறிக்கை இன்று (22) பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இன்று (22) காலை அலரி மாளிகையில் வைத்து, இது தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குறித்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டது.
அவ்வறிக்கையில், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த குறித்த கட்டடம் இடிக்கப்பட காரணமாக இருந்தவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட 5 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கட்டடத்தின் முன் பகுதியில், கூரை மற்றும் ஜன்னல்களின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதால், அப்பபாகங்களை தொல்பொருள் ரீதியாக பாதுகாக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. முற்றிலுமாக அழிக்கப்பட்ட பின்புறப் பகுதியில் மரக் குற்றிகள் மற்றும் செங்கற்கள், இடிபாடுகள் உள்ளிட்ட கட்டடப் பொருட்கள் பாதுகாப்பாக உள்ளன. எனவே, தொல்பொருள் திணைக்களத்தினால், இதற்கு முன்னர் குறித்த இடம் தொடர்பில் விரிவாக ஆவணப்படுத்தி, பாதுகாப்புத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதால், குறித்த பழைய பகுதியை மீண்டும் பழையபடி அமைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பழைய கட்டடம் விரைவில் பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்த கட்டடத்தை தொல்பொருள் திணைக்களத்தினால் கையகப்படுத்துதல்.
இந்த பகுதியை விரிவுபடுத்தும் திட்டத்தில் மாற்றம் செய்யுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு யோசனை முன்வைத்தல்.
இந்த அழிவுக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தல்.
இந்த அழிவுக்கு காரணமான நிறுவனம் அல்லது நபரிடமிருந்து இதனை பாதுகாப்பதற்கு அவசியமான நிதியை பெற்றுக் கொள்ளல்.
பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் புத்த சாசன மற்றும் கலாச்சார விவகாரங்களின் செயலாளரினால், நியமிக்கப்பட்ட இக்குழுவில், தொல்பொருள் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் செனரத் திஸாநாயக்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரி.ஜீ. குலதுங்க, குருணாகல் மாவட்ட மேலதிக செயலாளர் ஜீ.ஏ. கித்சிறி, கலாச்சார மற்றும் புத்தசாசன அலுவல்கள் அமைச்சின் பிரதிப் பணிப்பாளர், தொல்பொருள் ஆய்வாளர் பிரசாத் ரணசிங்க, மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர், கட்டட வடிவமைப்பாளர் திருமதி. சுமேதா மாதொட்ட ஆகியோர் இதில் அங்கம் வகிக்கின்றனர்.
No comments:
Post a Comment