
வெல்லம்பிட்டி பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து 23 கிலோ கிராம் ஹெரோயினை, விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
அத்தோடு, இச்சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பிரபல பாதாள குழு உறுப்பினர் ஒருவரின் மைத்துனர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்
புத்கமுவ வீதியில், பிரண்டியாவத்தை பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சந்தேகநபர், கொம்பனித்தெரு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment